இது மேலதற் கொரு புறனடை. வாயில்கண் மகிழ்ச்சிப் பொருண்மை கூறுதலன்றி அன்பு நீங்கிய கிளவி கூறினாராயிற் றலைவன் சிறைப்புறத்தானாகப் பெறுவர் எனச் சொல்லுவர் என்றவாறு. இதுவும் ஓரிலக்கணங் கூறியவாறு. (38)
1. `தோன்றின்' என்பது படைத்துக் கொண்டு கூறுவர் என்பதா மாகலின் குறித்தன்று என்பது போயின்று என்பது போல றகரம் ஊர்ந்த குற்றியலுகரம் (தொல். பொருள். 179. நச்சி.)
|