கற்பியல்

179கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி
கிழவோன் வினைவயின் உரிய என்ப.

இது, தலைவற் குரியதொரு மரபுணர்த்திற்று.

தலைவி முன்னர்த் தலைவன்றன்னைப் புகழுங் கூற்று வினைவயிற் பிரியும் வழியுரிய என்றவாறு.

"இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இழிவு"

(கலித். 2)

என்றும்,

"இல்லிருந்து மகிழ்வோர்க் கில்லையால் புகழ்"


என்றும் இவ்வாறு கூறுதல். இவ்வாறு கூறவே "யான் செய்யேன்" எனத் தன்னைப் புகழ்ந்தவாறாம்.
(40)