இதுவுமது.
தலைவன் போகக் கருதித் தவிர்தல் போகாமையன்று; தலைவியை வற்புறுத்துதலைக் குறித்துத் தவிர்ந்த தவிர்ச்சியாம் என்றவாறு.
எனவே வினைமேற் செல்லுங்காலத்துத் தலைவி பொறாள் எனப் போகாமை இல்லை; வற்புறுத்திப்போம் என்றவாறாம்.