கற்பியல்

1851பூப்பின் புறம்பா டீரறு நாளும்
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர்
பரத்தையிற் பிரிந்த காலை யான.

இதுவுமது.

பூப்பினது புறம்பு பன்னிரண்டு நாளும் விட்டு அகன்றுறைவாரல்லர் என்று சொல்லுவர் பரத்தையிற் பிரிந்த காலத்து என்றவாறு.

பரத்தையர் சேரியானாயினும் பூத்தோன்றி மூன்று நாள் கழித்த பின்பு பன்னிரண்டு நாளும் நீங்குதல் அறமன்று என்றவாறு. இதனாற் பயன் என்னையெனின் அது கருத் தோன்றுங் காலம் என்க.

(46)


1. பூப்பின் முன்னாறு நாளும் பின்னாறு நாளும் என்றும், பூப்புத் தோன்றியநாள்முதலாகப் பன்னிரண்டு நாளும் என்றும், நீத்தல் தலைவன்மேல் ஏற்றியும், அகறலைத் தலைவிமேல் ஏற்றியும் உரைப்பாரும் உளர்.

பூப்புப் புறப்பட்ட ஞான்றும் மற்றைநாளும் கருத்தங்கில் அது வயிற்றில் அழிதலும் மூன்றாம் நாளில் தங்கில் அது சில் வாழ்க்கைத்தாகலும் பற்றி முந்நாளும் கூட்டம் இன்று என்றார். (தொல். பொருள். 187. நச்சி.)