இதுவுமது. வேந்துறு தொழிலாவது பகைதணி வினை. வேந்தற்குற்றவழி, தூது காவல் என அவ்வழிப் பிரிவிற்கும் ஆண்டினது அகமே காலம் என்றவாறு. எனவே அறுதிங்கள் முத்திங்கள் எல்லாங் கொள்ளப்படும். (48)
1. இனிப் பத்து என்னாது யாண்டு என்றதனால் பின்பனி தானும் என்பதனாற் கொண்ட சிறப்பில்லாத பின்பனிக்குரிய மாசி தொடங்கித் தை ஈறாக யாண்டு முழுவதூஉம் கொள்ளக் கிடந்ததேனும், அதுவும் பன்னிரு திங்களும் கழிந்த தன்மையின் யாண்டினது அகமாமென்றுணர்க. (தொல்.பொருள்.189.நச்சி.)
|