பொருளியல்

201ஒருசிறை நெஞ்சோடு சாவுங் காலை
உரிய தாகலும் உண்டென மொழிப.

என்-எனின், மேலதற்கோர் புறனடை உணர்த்திற்று.

தனித்து நெஞ்சோடு உசாவுங்காலத்துக் கிழவோற் சேர்தல் உரியதாகலும் உண்டு என்றவாறு.

உம்மை எச்சவும்மை யாகலால் தோழியோடு உசாதலும் கொள்க.

"கோடீர் இலங்குவளை நெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
ஈங்கிவண் உறைதலும் உய்குவம் ஆங்கே
எழுவினி வாழிய1 நெஞ்சே".

(குறுந்.11)

எனவரும்.

"பகலே பலருங் காண வாய்விட்2
டகல்வயற் படப்பை யவனூர்3 வினவிச்
சென்மோ வாழி தோழி".

(நற்றிணை. 365)

என்றது தோழியொடு உசாவியது.
(9)

1. வாழி என்.
2. நாண்விட்.
3. அகல்வயிற் படப்பையவனகர்