இது, அறத்தொடு நிற்க நிலைமரபு உணர்த்திற்று. தலைவி அறத்தொடு நிற்குங் காலத்தன்றித் தோழி தானே அறத்தொடு நிற்கும் மரபு இலள் என்றவாறு. தலைவி அறத்தொடு நிற்குமாறு : "விழுந்த1 மாரிப் பெருத்தண் சாரற் கூதிர்க் கூதளத் தலரி நாறும் மாதர் வண்டின் நயவருந் தீங்குரல் மணநாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர்மலை நாடற் குரைத்தல் ஒன்றோ துயர்மருங் கறியா அன்னைக் கிந்நோய் தணியுமா றிதுவென உரைத்தல் ஒன்றோ செய்யா யாதலிற் கொடியை தோழி மணிகெழு நெடுவரை அணிபெற நிவந்த செயலை அந்தளிர்2 அன்னஎன் மதனின் மாமெய்ப்3 பசலையுங் கண்டே". (நற்றிணை.244) என வரும். தோழி யறத்தொடு நிற்றல் வருகின்ற சூத்திரத்தாற் கூறுப.(11)
1. வீழ்ந்த. 2. மருதளிர். 3. மாமை.
|