பொருளியல்

208வேட்கை மறுத்துக் கிளந்தாங் குரைத்தல்
மரீஇ மருங்கின் உரித்தென மொழிப.

என் - எனின். இதுவும் தலைமகட்குந் தோழிக்கும் உரியதோர் இயல்புணர்த்திற்று.

வரைதல் வேட்கைப் பொருளாற் கூறுதலை மறுத்துப் பட்டாங்கு கூறிச்சொல்லுதல் மருவிய பக்கத்தின் உரித் தென்றவாறு. மருவிய பக்கமாவது களவொழுக்கம் நீட்டித்த இடம். அவ்வழிப் பட்டாங்கு கூறுதலும் ஆம் என்றவாறு. எனவே, மேற்கூறியவாறு கூறுதல் மருவாதவழி என்றவாறாம்.

"கொடிச்சி யின்குரல் கிளைசெத்1 தடுக்கத்துப்
பைங்குரல் ஏனற் படர்தருங் கிளியெனக்
காவலுங் கடியுநர் போல்வர்
மாமலை2 நாட வரைந்தனை கொண்மே"

(ஐங்குறு.289)
என வரும்.
(16)

1. கிளிசெத்.
2. மால்வரை.