என் - எனின். இது தலைமகற்குரியதோர் மரபுணர்த்திற்று. களவுக்காலத்துத் தேரும் யானையும் குதிரையும் பிறவும் ஊர்ந்து சேறலும் உரியர் என்றவாறு. களவின்கண் என்பது அதிகாரத்தான் வந்தது. "நெடுந்தேர் கடாஅய்த் தமியராய் வந்தோர் கடுங்களிறு காணீரோ என்றீர் - கொடுங்குழையார் யானை அதருள்ளி நிற்பரோ தம்புனத்து ஏனல் கிளிகடிகு வார்." பிறவு மன்ன. `ஊர்ந்தன ரியங்கலு முரியர்' என்றமையால் தனி வருதல் பெரும்பான்மை . இதனை எச்ச வும்மையாக்கி வையமூர்தலும் இளையரோடு வருதலுங் கொள்க. "வல்வே லிளையரொ டெல்லிச் செல்லாது" (அகம். 120) என வரும்.பிறவுமன்ன. இதனால் சொல்லியது பெரியார் இவ்வாறு செய்வார் எனவுங் கூறியவாறாம். (17)
|