பொருளியல்

210உண்டற் குரிய1 அல்லாப்பொருளை
உண்டன போலக் கூறலும் மரபே.

என் - எனின். இஃது ஒருசார் வழுவமைத்தலை நுதலிற்று.

உண்டற்றொழிலுக் குரியவல்லாத பொருளை உண்டனவாகக் கூறலும் மரபென்றவாறு.

` பசலையால் உணப்பட்டுப் பண்டைநீ ரொழிந்தக்கால் '

(கலித். 15)

எனவும்,

` நீலமுண்டதுகில் '

எனவும்,

" கண்ணுங் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னு மவர்க்காண லுற்று "

(குறள். 1244)

எனவும் வரும் .

இது சொல்லின்கட் கிடந்ததோ ரொழிபு.

(18)

1. இன்னும் உய்த்துக்கொண்டுணர்தல் என்பதனான். உண்ணப்படுதற்குரிய அல்லாத பொருளதனைப் பிறர் உண்ணப்பட்டது போலக் கூறலும் மரபாம் என்பது பொருளாகக் கொள்க.

(தொல், பொருள், 213 நச்சி. )