என் - எனின். இது களவுக் காலத்துத் தலைமகற் குரியதோர் இயல்புணர்த்திற்று. பொருள்வயிற் பிரிதல்வேண்டும் எனக் கூறுதலும் கடியப்படாது, தலைமகளைத் தமர் காக்குங்காவல் மிகுதியுள்ள வழி இவை நீங்கப்பெறும் என்றவாறு. இதனாற் சொல்லியது அன்பையும் அறத்தையும் இன்பத்தையும் நினைத்து வருந்தப்பெறான் எனவும், நாணத்தைக் கைவிட்டுத் தமர் கொடுக்குமாறு முயலவேண்டு மென்பதூஉம் கூறியவாறாம். இவை ஒருவழித் தணத்தற்கண் நிகழ்வன. (19)
|