என் - எனின். இதுவும் தலைமகற்குரியதோர் திறன் உணர்த்திற்று. தலைமகன் பொருள்வயிற் பிரியும்வழி உடன் போக்குக் கருதிய தலைமகட்கு யான் போகின்ற நெறி கல்லுங் கரடுமாகிய சுரம் எனக் கூறுதலும் நீக்கப்படாது என்றவாறு. இதனாற் சொல்லியது காப்புமிகுதிக்கண் வருத்தமுறுந் தலைமகளை உடன்கொண்டு போதல் தக்கது என்பார்க்கு நெறியருமை கூறி விலக்கவும் பெறும் என்றவாறு. (20)
|