என் - எனின். இதுவுமது. மிக்க பொருளாவது மேற்கூறப்பட்ட அகப்பொருள் அப்பொருட்கண்ணும் நாண் நீங்காத நல்வழிக்கட் படுத்துப் பொருள்வகை புணர்க்க என்றவாறு. எனவே, அறமுதலாயின வழுவின் றாயினும் நாணழிய வரும் பொருண்மை புணர்த்தற்க என்றவாறு. "பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின் அறன்1 நாணத் தக்க துடைத்து". (குறள். 1018) என வரும். |