என் - எனின், பரத்தையிற் பிரிவிற்கு உரியாரை உணர்த்துதல் நுதலிற்று. பரத்தையர்மாட்டு வாயில் விடுதல் நான்கு வருணத்தார்க்கும் உரித்து; அவ்வழிப் பிரியும் பிரிவு நிலம் பெயர்தல் இல்லை என்றவாறு. எனவே, தன்னூரகத்துஞ் சார்ந்தவிடமுங் கொள்க. நால்வர்க்கும் உரித்து என்றமையான் நான்கு வருணத்துப் பெண்பாலாரும், அவளொடு ஊடப்பெறுப என்றவாறுமாம். "யாரிவன் எங்கூந்தல் கொள்வான் இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து". (கலித். 89) என்பது பார்ப்பனி கூற்று."பெரியார்க், கடியரோ ஆற்றா தவர்". (கலித். 88) என்பது அரசி கூற்று.(28)
1. `பரத்தை வாயில்' என்றது குதிரைத் தேர்போல நின்றது, இதனாற் பயன் அந்தணர்க்கு நால்வரும் அரசர்க்கு மூவரும் வணிகர்க்கு இருவருமாகிய தலைவியர் ஊடற்குரியர் என்பதூஉம் - அவர் வாயில் மறுத்தலும் நேர்தலும் உடையர் என்பதூஉம் ஏனைப் பரத்தையர்க்கு வாயில் விடுதல் இன்றென்பதூவும் கூறியவாறாயிற்று. (தொல். பொருள். 224. நச்சி.)
|