என் - எனின். கற்புக்காலத்துத் தலைமகட் குரியதோர் மரபு உணர்த்திற்று தலைமகள் உயர்வும் தலைமகன் தாழ்வும் ஆராயுங் காலத்துப் புலவிக்காலத்து உரிய வென்றவாறு. எனவே , ஒழிந்த ஊடல் துனியென்பனவற்றிற் குரியவாம் . "ஒரூஉக் கொடி யியல் நல்லார் குரனாற்றத் துற்ற 1 முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத் தொடிய எமக்கு நீ யாரைப் பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர் ; கடியர்நமக்கி யார்சொலத் தக்கார் மாற்று2 வினைக்கெட்டு வாயெல்லா வெண்மை யுரையாது கூறுநின்3 மாய மருள்வா ரகத்து : ஆயிழாய் , நின்கண் பெறினல்லால் இன்னுயிர் வாழ்கல்லா என்கண் எவனோ தவறு . " (கலித் . 88 ) இதனுள் தலைமகன் பணிவுந் தலைவி யுயர்வுங் காண்க. இஃது ஈண்டுக் கூறியதென்னை? `காமக் கடப்பினுட் பணிந்த கிளவி, (கற்பியல். 16) யென மேற்கூறப்பட்டதாலெனின், ஆண்டுக் கூறியது ஊடல் புலவி துனியென்னு மூன்றிற்கும் பொதுப்பட நிற்றலின், இது புலவிக்கே உரித்தென்னுஞ் சிறப்பு நோக்கிக் கூறியவாறு காண்க. (31)
(பாடம்) 1. தேற்ற . 2. கடியத் தமக்கினியார் சொலத்தக்க ராமற்று. 3. உரையாதி சென்றுநின்.
|