என்பது சூத்திரம். என் - எனின். இது, இறைச்சிப்பொருளாற் படுவதோர் பொருள் உணர்த்திற்று. அன்புறுதற்குத் தகுவன இறைச்சிப் பொருட்கண் சுட்டுதலும் வற்புறுத்தலாம் என்றவாறு. உம்மை இறந்தது தழீஇயிற்று. "அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையாற் கடியவே கனங்குழாஅய் காடென்றார் அக்காட்டுள் துடியடிக் கயந்தலை கலக்கிய சின்னீரைப் பிடியூட்டிப் பின்னுண்ணுங் களிறெனவும் உரைத்தனரே." (கலித்.11) என்றது வற்புறுத்தற் குறிப்பு.(35)
1. இறைச்சியுள் அன்புறு தகுந சுட்டலும்-தோழி கருப்பொருள்களுள் தலைவன் அன்பு செய்தற்குத் தகுவனவற்றைக் கருதிக் கூறலும். (தொல். பொருள். 231. நச்சி) (பாடம்) 2. தகுந இறைச்சியுட்.
|