என்-எனின். இது தலைமகட் குரியதோர் இயல்புணர்த்துதல் நுதலிற்று. தலைமகன் பொருள்வயிற் பிரியுமிடத்து ஆறின்னாமையா னுளதாகிய அச்சமும் வினைவயிற் பிரியுங் காலத்தினுந் தலைவியைப் பாராட்டிப் பிரிதலினால், அப்பாராட்டினான் மெய் பெறவுணரும் என்றவாறு. உதாரணம்"நெஞ்சு நடுக்குறக் கேட்டுங் கடுத்துந்தாம் அஞ்சியது ஆங்கே அணங்காகும் என்னுஞ்சொல் இன்றீங் கிளவியாய் வாய்மன்ற நின்கேள் புதுவது பன்னாளும் பாராட்ட யானும் இதுவொன் றுடைத்தென எண்ணி " (கலித்.24) என்றமையாற் பாராட்டினால் தலைமகள் பிரிவு உணர்ந்தவாறு அறிக.(36)
|