பொருளியல்

229கற்பு வழிப் பட்டவள் பரத்தையை1 ஏத்தினும்2
உள்ளத் தூட லுண்டென் மொழிப.

என் - எனின். இதுவும் அது

கற்புக் காரணமாகத் தலைமகனது பரத்தைமைக்குடன்பட்டாளே யாயினும், உள்ளத்தின்கண் ஊடல் நிகழும் என்றவாறு.

(37)

(பாடம்) 1. பரத்தை.

2. `ஏத்தினும்' என்ற உம்மையால் கூறும்பொழுதெல்லாம் மாறுபடக்கூறல் உளது என்பது பெற்றாம்.

(தொல். பொருள். 233. நச்சி)