பொருளியல்

235உறுகண் ஓம்பல் தன்னியல் பாகலின்
உரிய தாகும் தோழிகண் உரனே.

என் - எனின் . இது தோழிக்குரியதோர் மரபுவழுக் காத்தலை நுதலிற்று.

தலைமகற் குற்ற துன்பம் பரிகரித்தல் தோழி இயல்பாகலின் அவட்குரியதாகும் அறிவு என்றவாறு.

அதனானே யன்றே:

"பால்மருள் மருப்பின் உரல்புரை பாவடி"


என்னும் பாலைக் கலியுள்,

"கிழவர் இன்னோர்1 என்னாது பொருள்தான்
பழவினை மருங்கிற் பெயர்புபெயர் புறையும்"

(கலித். 21)

எனக் கூறினாள் என்று கொள்க.
(43)

(பாடம்) 1. இன்னர்.