பொருளியல்

236உயர்மொழிக் கிளவியும் உரியவால் அவட்கே.

என் - எனின். இதுவு மது.

உயர்த்துச் சொல்லுங் கூற்றும் உரித்து தோழிக்கு என்றவாறு.

"தாமரைக் கண்ணியை தண்நறுஞ் சாந்தினை
நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின்
மணங்கமழ் நாற்றத்த மலைநின்று பலிபெறூஉம்
அணங்கென அஞ்சுவர் சிறுகுடி யோரே"

(கலித்.52)

என்பது உயர்த்துச் சொல்லியவாறு.
(44)