உவமையியல்

283அன்ன வாங்கு1 மான இறப்ப
என்ன உறழத் தகைய நோக்கொடு
கண்ணிய எட்டும் வினைப்பா லுவமம்.
என்-னின். மேற்சொல்லப்பட்டவற்றுள் சிறப்புவிதியுடையன உணர்த்துவான் எடுத்துக் கொண்டார். அவற்றுள் வினையுவமத்திற்குரிய சொல் வரையறை யுணர்த்துதல் நுதலிற்று.

அன்னமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் வினையுவமத்திற்குரிய சொல்லாம் என்றவாறு.

'கொன்றன்ன வின்னா செயினும்

(குறள். 109)

'பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு

(திருமுருகாற்.2)

'புலவுநுனைப் பகழியுஞ் சிலையு மானச்
செவ்வரிக் கயலொடு பச்சிறாப் பிறழும்'

(பெரும்பாணாற். 269,271)

'புலியிறப்ப வொலிதோற்றலின்

'புலியென்னக் கலிசிறந் துராஅய்'

'செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை'

(திருமுருகாற். 5)

'பொருகளிற் றெருத்தின் புலிதகையெப் பாய்ந்து'

'மானொக்கு நோக்கு மடநடை யாயத்தார்'


எனவரும்.

(12)


23. (பாடம்) வாங்க.