என் - னின். எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்டவற்றுள் அன்னஎன்னுஞ் சொல் ஒழிந்தபொருளொடுஞ் செல்லும் என்றவாறு. 'மாரி யன்ன வண்கை' (புறம். 133) இதுபயன்.'பரியரைக் கமுகின் பாளையம் பசுங்காய் கருவிருந்தன்ன கண்கூடு சிறுதுளை (பெரும்பாணாற் 7 - 8) இதுமெய். 'செவ்வானன்ன மேனி' (அகம் கடவுள் வாழ்த்து)
'பாலன்ன மென்மொழி' இவை உரு. பிறவுன்ன.
(13)
|