என் - னின். மெய்யுவமத்திற் குரியசொல் உணர்த்துதல் நுதலிற்று. கடுப்ப என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்யுவமத்திற்குரிய சொல்லாம் என்றவாறு. 'விண்ணதிர் இமிழிசை கடுப்ப' (மலைபடு. 2) 'அகலிரு விசும்பிற் குறைவில் ஏய்ப்ப'
'வேய்மருள் பணைத்தோள் நெகிழ' (அகம். 1) 'வேய்புரை மென்றோள்' (கலித்.39) 'முத்துடை வான்கோ டொட்டிய முலைமிசை வியப்பனதழீஇ'
'பாம்புரு வொடுங்க வாங்கிய நுசுப்பின்'
'செந்தீ யோட்டிய வஞ்சுடர்ப் பருதி'
கண்ணொடு நிகர்க்குங் கழிப்பூங் குவளை' எனவரும்.(15)
1. இவற்றை உரிமை கூறிப் பெருவரவின எனவே ஒழிந்தனவும் சிறுபான்மை வரும். என்பதூஉம் அவை பொதுச்சூத்திரத்தான் அடங்கும் என்பதூஉம் கொள்க. (தொல். பொருள் .290. பேரா.)
|