உவமையியல்

287போல மறுப்ப ஒப்பக் காய்த்த
நேர வியப்ப நளிய நந்தவென்
றொத்துவரு கிளவி உருவி னுவமம்.
என் - னின். உருவத்திற்குரிய சொல் உணர்த்துதல் நுதலிற்று.

போல என்பது முதலாகச் சொல்லப்பட்ட எட்டும் உருவவமத்திற் குரியசொல்லாம் என்றவாறு.

'தன்சொ லுணர்ந்தோர் மேனி

பொன்போற் செய்யும் ஊர்கிழ வோனே.

(ஐங்குறு. 41)

'மணிநிற மறுத்த மலர்ப்பூங் காயா'

'ஒண்செங் காந்த ளொக்கு நின்னிறம்'

'கணைக்கால் நெய்தல் காய்த்திய கண்ணியம்'

'கார்விரி கொன்றைப் பொன்நேர் புதுமலர்'

(அகம்,கடவுள் வாழ்த்து)

'தண்டளிர் வியப்பத் தகைபெறு மேனி'

எனவரும்.

நளிய நந்தஎன்பன வந்தவழிக் கண்டுகொள்க.

(16)