என் - னின். எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தல் நுதலிற்று. மேற்சொல்லப்பட்ட உவமை நான்குவகை யாதலேயன்றி எட்டாம் பக்கமும் உண்டு என்றவாறு. அவையாவன: வினையும் வினைக்குறிப்புமென இருவகையாம். பயன் என்பது. நன்மை பயத்தலும் தீமை பயத்தலும் என இருவகையாம். மெய்யென்பது வடிவும் அளவும் என இருவகையாம். உருவென்பது. நிறமுங் குணமுமென இருவகையாம் இவ்வகையினா வெட்டாயின. 'பொன்னன்ன செல்வத்தன்' இது வினைக்குறிப்பு.
'ஞாயி றனையைநின் பகைவர்க்கு' (புறம்.59 - இது தீப்பயன்). 'நெடுவரை மிசையிற் பாம்பென விழிதருங்'
'கடுவரற் கலுழி' என்பது அளவு.'பாலன்னமொழி' இது குணம்.ஏனையமேற்காட்டப்பட்டன.
|