உவமையியல்

292உவமப் பொருளை உணருங் காலை
மருவிய மரபின் வழக்கொடு வருமே.1
என் - னின். மேலதற்கோர் புறனடை யுணர்த்துதல் நுதலிற்று.

உவமப் பொருளை உவமிக்கப்படும் பொருளாக உணருங்காலை மருவிய மரபினானாய வழக்கொடுவரும் என்றவாறு.

எனவே மருவாதன அவ்வாறு கயல்சிலை என்றாற்போலக் கூறப்படா வென்றவாறு.


1. - (பாடம்) படுமே.