என் - னின் இதுவுமோர் மரபுணர்த்துதல் நுதலிற்று. இரட்டைக் கிளவியாவது உவமை யிரண்டு சொல்லோடு அடுத்துவருவதனோடு உவமிக்கப்படும் பொருளும் இரண்டு பொருளாகி வருதல்வேண்டும் என்றவாறு. அவ்வழி இரண்டுசொல்லும் ஒருசொன் னீர்மைப்பட்டு வருதல் வேண்டுமென்று கொள்க. "விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோ டேனை யவர்." (குறள். 410) இதனை வேறுபாடு அறிக.(22)
1. இரட்டை கிளவி எனப் பொருளினை முற்கூறியதனான் இரண்டு பொருளினை ஒன்றாக் கூட்டி உவமிக்கக் கருதினான். உவமையினையும் இரண்டு ஒன்றாக்கியே உவமிக்கும் என்பது கருத்து. (தொல், பொருள், 297. பேரா)
|