என் - னின். மேலதற்கோர் புறனடை. மேற்சொல்லப்பட்ட ஐந்தும் உரைத்த வாய் பாட்டாற் கூறும்வழிச்சொல்லப்பட்ட ஐந்தினும் ஏதுவாகச் சொல்லிப் பின்னர்க் கூறவேண்டும் என்றவாறு. நினக்குவமையில்லை என்னும்வழிச் செயலானாதல். பயனானாதல். உறுப்பானாதல், உருவானாதல், பிறப்பானாதல் ஒப்பாரில்லையெனல் வேண்டும் என்பது கருத்து. பிறவு மன்ன (25)
1.உறுப்பென்றது மெய்யினை; உடம் பினை உறுப்பென்பவாகலானும் மெய்யுவம மெல்லாம் உறுப்பினையே பற்றிவருதல் பெரும்பான்மைய என்றற்கும் அவ்வாறு கூறினான் என்பது........ ' தவலரும் சிறப்பின் அத்தன்மை நாடின் ' என்றதனான் ஏனை உவமத்தினும் உள்ளுறை உவமமே செய்யுட்கும் பொருள் இலக்கணத்திற்கும் சிறந்ததென்பது ( தொல், பொருள். 300. பேரா.) 2. (பாடம்) திறத்தியலென்ப.
|