என் - னின். தலைமகள் உவமை கூறுமிடன் உணர்த்துதல் நுதலிற்று. தலைமகள் உவமை கூறுங்கால் மேற்சொல்லப்பட்ட இரண்டிடத்தும் உரித்து என்றவாறு. எனவே இரண்டும் அல்வழி உவமை கூறப்பெறாள் என்றவாறாம். (31)
1. இரண்டிடம் என்பன, மருதமும் நெய்தலும், அந்நிலத்துப் பிறந்த பொருள்பற்றி யல்லது உள்ளுறை உவமம் சொல்லுதல் கிழத்திக்கு உரித்து அன்றென்பது கருத்து. ' கிழவோட்குவமம் பிரிவிடத்துரித்து ' என்பது பாடமாக உரைப்பாரும் உளர். யாதானும் ஒரு நிலத்தாயினும் பிரிந்திருந்த இடத்து உள்ளுறையுவமம். கூறப்பெறுங் கிழத்தி என்பது இதன் கருத்து. பெருந்தண் வாடையின் முந்துவந்தோன் என்பது பிரிவன்றாகலின் ஈரிடம் என்றலே வலிதென்பது. (தொல். பொருள். 304. பேரா.)
|