செய்யுளியல்

3141இயலசை முதலிரண் டேனவை2 உரியசை.

என்-னின். மேற்சொல்லப்பட்ட அசைக்குப் பிறிதோர் குறியிடுதல் நுதலிற்று.

முற்பட்ட நேரசையும் நிரையசையும் இயலசையெனக். குறிபெறும். நேர்பசையும் நிரைபசையும் உரியசையெனக் குறிபெறும் என்றவாறு.

(5)

1. இயலசை உரியசை என்று ஆளும் ஆகலானும் இயற்கையால் இயறலின் இயலசை யெனவும், அவை செய்யும் தொழில் செய்ததற்கு உரிய வாகலான் உரியசை எனவும் ஆட்சியும் குணனுங் காரணமாகப் பெயர் எய்துவித்ததூஉம் ஆயிற்று.( தொல் : பொருள். 318.பேரா.)

2. (பாடம்)டேனைய.