செய்யுளியல்

315தனிக்குறில் முதலிசை மொழிசிதைந்1 தாகாது.

என்-னின். இதுவும் அசைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

தொடர்மொழிக்கண் மொழி சிதைந்து தனிக் குறில் நேரசையாகா தென்றவாறு.

"மொழிசிதைத்தலாவது-ஒற்றுமைப் பட்டிருக்கின்றதனைப் பிரித்தல்.அஃதாவது புளிமா என்றவழி நிரைநேராக அலகிடாது முதனின்றதனை நேரசையாக்கி யிடை நின்றதூஉ மிறுதிநின்றதூஉம் நிரையசையாதல். அவ்வழிப் புளி யென்னுஞ் சொல்லைப் பிரிக்கவேண்டுதலின் நிரையசையாகவே கோடல்வேண்டு மென்றவாறு. இனி. மொழி சிதையாக்கால் நேரசையாம். அது விட்டிசைத்து நிற்றல்.82 மறியா...னாட்டைநீ" (யாப். வி. பக். 142) எனவும். "ஆஆ இழந்தானென் றெண்ணப்படும்" (நாலடி.9) எனவும் வருவன முதலெழுத்து நேரசையாம்.

(6)

1. மொழிசிதைத்.