என்-னின்.இதுவுமது. குற்றியலிகரம் ஒற்றெழுத்து இயல்பிற்று என்றவாறு. அடியினதிடைக்கண் ஒற்றுமைப்பட்ட சொல்லின்கண் நேரசை என்று...எனவே அலகுபெறாதென்றவாறாம். "பேதை யென்ப தியாதென வினவின் ஓதிய இவற்றை உணராது மயங்கி இயற்படு பொருளாற் கண்டது மறந்து முயற்கோ டுண்டெனக் கண்டது தெளிதல்." இதன்கட்குற்றியலிகரம் அலகு பெறாதவாறு காண்க. (7)
1. குற்றுகரத்திற்குப் புள்ளி பெறுதலுங் கூறினான்; அதுபோலக் குற்றிகரமும் புள்ளிபெற்று நிற்றல் உடைத்தெனவும் ஈண்டுக்குற்றுகரம் நேர்பும் நிரைபுமாகிய வாறுபோலத்தானும் ஓர் அசையாகும் கொல் என்று ஐயுறுவது வேண்டா, ஒற்றுநின்றாங்கு நின்று இயலசை உரியசைகளைச் சார்ந்து வருதலும் ஒற்றுப்போல எழுத்தெண்ணப் படாமையும் உடைத்தது என்றவாறும் ஆயிற்று.(தொ.பொருள்.320.பேரா.)
|