என்-னின் இயலசைப் பின்னர் உரியசைவரின், நிரையசை வந்தாற்போலக் கொள்க வென்றவாறு. எனவே இவையும் இயற்சீ ரென்றவாறாம். உதாரணம் "மாங்காடு, களங்காடு, பாய்குரங்கு,கடிகுரங்கு." இத்துணையுங் கூறப்பட்டது ஈரசைச் சீர் பதினாறினும் இயற்சீர் பத்தும் ஆசிரியவுரிச்சீர் ஆறுமா மென்றவாறு.
1. இச்சூத்திரமும் சீராமாறே அன்றிச் சீர்தளைக்குமாறும் கூறியவாறாயிற்று.(தொல்,பொருள்,328,பேரா.) (14)
|