செய்யுளியல்

325 1அளபெடை அசைநிலை ஆகலும் உரித்தே.

என்-னின் சீர்க்கண் உயிரளபெடைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

உயிரௌபெடை அசையாக நிற்கவும் பெறும் என்றவாறு.

உம்மை எதிர்மறையாகலான் ஆகாமை பெரும்பான்மை.

உதாரணம்

"கடாஅ உருவொடு...வல்லதே ஒற்று."

(குறள்.585)

இது அளபெடை யலகுபெற்றது.

"இடைநுடங்க வீர்ங்கோதை பின்தாழ வாட்கண்
புடைபெயரப் போழ்வாய் திறந்த கடைகடையின்
உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்
கொப்போநீர் வேலிஉலகு."

இதன் கண் அளபெடை யசைநிலையாகி யலகுபெறாதாயிற்று.

(15)

1. இயலசை மயக்கமாகிய இயற்சீர் நான்குமாகி அளபெடை வந்தன.ஒழிந்த இயற்சீரும் மேல்நான்கனுள் அடங்குமாகலின் அளபெடைநான்கென்பாரும் உளர்.அவை தனிநிலை முதனிலை இடைநிலை இறுதிநிலை எனப்படும் என்ப. (தொல்,பொருள்,321.பேரா)