செய்யுளியல்

327இயற்சீர் இறுதிமுன் நேரவண் நிற்பின்
உரிச்சீர் வெண்பா ஆகும் என்ப.

என்-னின்.வெண்பாவுரிச்சீர் ஆமாறுணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட ஈரசைச்சீர் பதினாறோடு நான்கசையுங் கூட்டியுறழ. அறுபத்துநான்கு மூவசைச் சீராம்.அவற்றுள் இயற்சீர் நான்கின்பின் நேரசை வந்த மூவசைச்சீர் நான்கும் வெண்பாவுரிச்சீராம் என்றவாறு.

உதாரணம்

"மாவாழ்கான் மாவருகான் புலிவாழ்கான் புலிவருகான்."

என்பன.

(17)