அகத்திணை இயல்

33உயர்ந்தோர்க் குரிய ஓத்தி னான1

இது, வணிகர்க்கு உரியதோர் பிரிவு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) உயர்ந்தோர்க்கு - மேல் அதிகரிக்கப்பட்ட பின்னோராகிய இருவகையோரிலும் உயர்ந்தோராகிய வணிகர்க்கு, ஒத்தின்னா உரிய - ஓதுதல் நிமித்தமாகப் பிரிதலும் உரித்து.

ஓத்துப் பலவாதலின் ' உரிய ' என்றார். ஈண்டு ஓத்து என்பது வேதம்; அது நால்வகை வருணத்தினும் மூவர்க்கு உரிய தென்பது இத்துணையெனக் கூறப்பட்டது.

(33)

1. வேதந்தோன்றிய பின்னர் அது கூறிய பொருள்களை இவையும் ஆராய்தலின் ஓத்தினான் என்று அவற்றிற்குப் பெயர் கூறினார்; ஓத்து என்பது வேதத்தையே ஆதலின்.

(நச்சி.)