என்-னின்.இது வஞ்சிப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வஞ்சிப் பாவினுள் ஒழிந்த சீர்கள் வரப்பெறும் என்றவாறு.
1. வஞ்சியது பாவினை வஞ்சி என்றான் ஆகுபெயரான். மற்றுச்சீர் கூறும்வழிப்பாக் கூறுவது என்னையெனின் அப்பாவினை ஆக்குவன சீர் ஆதலின் சீர் இலக்கணம் எய்தும் என்பது.(தொல், பொருள், 334,பேரா.) (20)
|