என்-னின்.வெண்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று. வெண்பாவுரிச்சீரும் ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவினது நேரடிக்கண் ஒருங்கு நிற்றலில்லை என்றவாறு. (21)
1. 'இன்பா நேரடி' யென்பது ஆசிரிய அடி என்றவாறு. 'ஒருங்கு' என்றதனான் இயற்சீராகிய தன்சீரேபோல வெண்சீரும் வாராதென்பதாம். ஈண்டு உரியசைமயக்கத்தினையே ஆசிரிய உரிச்சீர் என்றான்.(தொல், பொருள், 335,பேரா.) (21)
|