செய்யுளியல்

332 கலித்தளை1 மருங்கிற் கடியவும் பெறாஅ2.

என்-னின்.கலிப்பாவிற் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

கலித்தளை வரும்வழி மேற் சொல்லப்பட்ட இரு வகைச்சீரு மொருங்கு நிற்கவும் பெறும் என்றவாறு.

(22)

1. 'கடியவும் படா' என்பது இறந்தது தழீஇய எச்சவும்மை. ஆசிரியத்தில் கடியப்படாவாதலே யன்றி ஈண்டுக்கடிதலும்படா என்றமையின் கலித்தளை மருங்கின்' என்பது வினைசெய் இடத்துக்கண் ஏழாவது வந்தது. 'தளைத்தல்' என்பது சீர்த்தொழில் ஆகலின்.(தொல், பொருள், 336,பேரா.)

2. (பாடம்)படாஅ