செய்யுளியல்

333கலித்தளை யடிவயின் நேரீற் றியற்சீர்
நிலைக்குரித் தன்றே தெரியு மோர்க்கே.

என்-னின். இதுவுமது.

கலிப்பாவிற்குரிய கலித்தளைக்கண் நேரீற்றியற் சீர் நிற்றற்குரித் தன்று ஆராய்வார்க் கென்றவாறு.