செய்யுளியல்

335 இசைநிலை நிறைய நிற்குவ தாயின1
அசைநிலை வரையார் சீர்நிலை பெறவே.

என்-னின். ஓரசைச்சீராமாறு உணர்த்துதல் நுதலிற்று.

இசை நிற்கின்றநிலை நிரம்பா நிற்குமாயின் அசையும் சீராந்தன்மைபோல வரையார் ஆசிரியர் என்றவாறு.

உதாரணம்

' நாள், மலர், காசு, பிறப்பு'


எனவரும்.
(25)

1.நிற்குவவாயின்.