செய்யுளியல்

336இயற்சீர் பாற்படுத் தியற்றினர் கொளலே
தளைவகை1 சிதையாத் தன்மை யான.

என்-னின். அவ்வோரசைச் சீர்தளை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஓரசைச்சீரைத் தளைவகை சிதையாத் தன்மை வேண்டுமிடத்து இயற்சீர்போலக்1 கொள்க என்றவாறு.

(26)

'தளைவகை சிதையாத்தன்மையான' என்று இடம் நியமித்த தென்னையெனின், சீர்வகையான் அசைச்சீர் என வேறாய் நிற்றலுடைய , தளைவகை சிதையாத்தன்மை நோக்கியே இயற்சீர்ப்பாற்படுத்து இயற்றுக என அடங்கக் கூறிற்றென அறிவித்தற்கென உணர்க.(தொல். பொருள்.310. பேரா).

2.இயற்சீரின் ஈறுபோல.