செய்யுளியல்

337வெண்சீர்1 ஈற்றசை நிரையசை இயற்றே.

என்-னின். இதுவுந் தளைவழங்குந் திறன் உணர்த்துதல் நுதலிற்று.

வெண்சீ ரீற்றசை தளைவழங்குமிடத்து இயற்சீரசை நிரையீறு போலும் என்றவாறு.

இயற்சீரென்பது அதிகாரத்தான் வந்தது

(27)

1.வெண்சீர்களின் இறுதியெனவே, மூன்றாம் சீரும் நான்காம் சீரும் வெண்சீராகல்கூறி, நிரைமுதல் வெண்சீர் வந்து நிரைதட்டல் எனவே இரண்டாம் சீரும் வெண்சீர் வரல் வேண்டுமெனக் கூறி நிரைதட்டும் எனவே இயற்சீரானும் ஆசிரிய உரிச்சீரானும் நிரையீறாயினவெல்லாம் , முதற்கண் நிற்கும் எனவும் கூறினான். கூறவே ஆசிரிய உரிச்சீர் இடை நில்லா எனவும் அங்ஙனம் நிற்பிற் கலியோசை அழியும் என்பதூஉம் ஆம் இவர் கருத்தென்பது.(தொல். பொருள்.341.பேரா.)