செய்யுளியல்

339அந்நிலை மருங்கின் வஞ்சி உரிச்சீர்
ஒன்றுத லுடைய ஒரோவொரு வழியே.1

என்-னின். இதுவுமது.

இன்சீரியைய வருகுவதாயின் வஞ்சியுரிச்சீரும் ஒரோவழி ஆசிரிய அடிக்கண் வரும் என்றவாறு.

'ஈரசைகொண்டு'

(செய்யு.11)

என்பது முதலாக இத்துனையுஞ் சொல்லப்பட்டது. ஓரசைச்சீர் நான்கு ஈரசைச்சீர் பதினாறு, மூவகைச்சீர் அறுபத்துநான்கு, ஆகச்சீர் எண்பத்துநான்கில் ஓர் அசைச்சீர் நான்கெனவும் அது தளைவழங்கும்வழி இயற்சீரொக்குமெனவும், ஈரசைச்சீர் பதினாறும் சிறப்புடைய இயற்சீர் நான்கும் சிறப்பிலியற்சீர் ஆறும் எனப் பத்தாம் எனவும், ஆசிரியவுரிச் சீர் ஆறு எனவும் மூவகைச்சீர் அறுபத்து நான்கில் வெண்பாவுரிச்சீர் நான்கெனவும் ஏனைய வஞ்சியுரிச்சீர் எனவும் கூறியவாறு2.
(29)

1.ஒரோரு வழியே.

2.தொகை கூறியவாறு