என்-னின். நிறுத்த முறையானே அடியாமாறு உனர்த்துதல் நுதலிற்று. நான்குசீர் ஒருங்கு தொடுத்து வருவதனை அடியென்று சொல்லப்படு மென்றவாறு. இதன் வேறுபாடு முன்னர்க் கூறப்படும். (30)
1. இருசீரானும் முச்சீரானும் ஐஞ்சீரானும் அறுசீர் முதலிவற்றானும் வருமாயினும் அவை சிறப்பில என்றவாறாம். இருசீரடி குறளடி என்றும்,முச்சீரடி சிந்தடி என்றும் நாற்சீர் அடி அளவடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்னும், அறுசீர் முதலியன கழிநெடிலடி யென்னும் கோடும் என்பது. இவற்றின் எல்லாம் நாற்சீரடி சிறந்ததென்றது என்னையெனின், அளவிற்பட்டமைந்தமையானும் அது பயின்று வருதலானும் என்பது.(தொல். பொருள் 347.பேரா)
|