என்-னின். தளைக்குந் தொடைக்கும் இடம் உணர்த்துதல் நுதலிற்று. தளையுந் தொடையும் அடியின்கண் என்றவாறு. (31)
1.முன்னும் சீர்வகையான் வகுக்கும் அடியன்றிக் கட்டளையடி யெல்லாம் தளைவகை உடைய எனவிதந்தோதி வந்ததனானே நாம்தளை கொள்வது நாற்சீர் அடிக்கண என்பான்' அடியுள்ளது தளை' என்றான் என்பது.... கட்டளைப் படுப்பதூஉம் தொடை உறழ்தற்கு இடன் ஆவதூஉம் நேரடியே எனச் சிறப்பித்தவாறு.(தொல். பொருள் 345.பேரா)
|