செய்யுளியல்

343அடியின்1 சிறப்பே பாட்டெனப் படுமே.

என்-னின்.இதுவும் அடிக்குரியதோர் சிறப்புணர்த்துதல் நுதலிற்று.

அடியின் சிறப்பினானே பாட்டென்று சொல்லப்படு மென்றவாறு.

எனவே,பாட்டென்னுஞ் செய்யுட்கு அடி யின்றியமையாதென்று கொள்க.பாட்டாவன:-வெண்பா ஆசிரியம் கலி வஞ்சி என்பன.

இனி அவ்வடியினை எழித்தளவினாற் குறியிடுகின்றார்.

(33)

1. மாத்திரை முதலியவற்றை உறுப்புக்களான் இத்துணை மாத்திரை கொண்டது செய்யுள் என்றானும் இத்துணை அசையும் சீரும் தொடையும் கொண்டது செய்யுள் என்றானும் அளவியல் கூறிய உறுப்புக்களான் வரையறுக்கப்படா . அடியளவே கூற செய்யுட் புலப்பாடாம் என்பது ' எனப்படும் ' என்றதனான் ஒழிந்த அடிகளாலும் அவ்வாறு வருமாயினும் அவை சிறப்பில என்பது , தலை இடைகடைச் சங்கத்தாரும் பிற சான்றோரும் நாற்சீர் அடியான் வரும் ஆசிரியமும் வெண்பாவும் கலியுமே பெரும்பான்மையும் செய்தார் . வஞ்சிப்பா சிறு வரவிற்றெனக் கொள்க . ( தொல் . பொருள்.347 பேரா).