என்-னின். குறளடி வரையறை உணர்த்துதல் நுதலிற்று. நாலெழுத்து முதலாக ஆறெழுத்தீறாக ஏறிய மூன்று நிலத்தையுடைத்து குறளடி யென்று சொல்லுவரென்றவாறு. எனவே, குறளடிக்கு நிலம் நாலெழுத்தும் ஐந்தெழுத்தும் ஆறெழுத்துமாம். இதற்குரிய எழுத்து முன்னர்க் காட்டுதும். (34)
1. குறளடி , சிந்தடி , அளவடி , நெடிலடி , கழிநெடிலடியென நாற்சீரடிதானே ஐவகைப்படுமென்று அவற்றது பெயரும் முறையுந் தொகையுங் கூறினான்........இப் பெயரெல்லாம் காரணப்பெயர் , மக்களுள் தீரக் குறியானைக் குறளன் என்றும் , அவனின் நெடியானைச்சிந்தன் என்றும் , ஒப்பமைந்தானை அளவிற்பட்டான் என்றும் , அவனின் நெடியானை நெடியான் என்றும் , அவனின் நெடியானை கழிய நெடியான் என்றும் சொல்லுப . அவைபோல் கொள்க இப்பெயர் என்பது . (தொல் , பொருள் , 348 . பேரா)
|