செய்யுளியல்

345 ஏழெழுத் தென்ப சிந்தடிக் களவே
ஈரெழுத் தேற்றம் அல்வழி யான.

என் - னின் . சிந்தடி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

ஏழெழுத்தென்று சொல்லுவர் சிந்தடிக்கு அளவு ; ஒன்பதெழுத்து ஏற்றம் அல்லாத விடத்தென்றவாறு.

எனவே ஏழும் எட்டும் ஒன்பதுமாகிய எழுத்தினாற் சிந்தடியாம் என்றவாறாம்.

(35)