செய்யுளியல்

346 பத்தெழுத் தென்ப நேரடிக் களவே
ஒத்த நாலெழுத் தேற்றலங்1 கடையே.

என்-னின் .அளவடியாமாறு உணர்த்துதல் நுதலிற்று .

அளவடி யெனினும் நேரடி யெனினும் ஒக்கும் . பத்தெழுத்து முதலாகப் பதினான் கெழுத்தளவும் அளவடியாம் என்றவாறு .

எனவே பத்தும் பதினொன்றும் பன்னிரண்டும் பதின்மூன்றும் பதினாலுமென ஐந்து நிலம்பெறும்.

(36)

1. தொற்றலங் .